பக்தருடன் பாடுவேன் பரம சபை
paktharudan paaduven parama sabai
பக்தருடன் பாடுவேன் – பரமசபை முக்தர்குழாம் கூடுவேன்
அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்தருடன்
1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே அன்பர் என் இன்பர்களும், பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால் என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் – பக்தருடன்
2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் – கு அகமும் ஆண்டவன் அடியே, சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும், இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே – பக்தருடன்
3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின் சேயன் கண் மூடுகையில், பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி, தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் – பக்தருடன்
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A E A E A A E A E A F#m E A A E A E A F#m E A F#m E A A E A E A F#m E A F#m E A A E A E A F#m E A F#m E A
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal