பாவி இன்றே
paavi indrae
பாவி, இன்றே திரும்பாயோ? - நேச ஆவியின் சத்தம் கேளாயோ?
மேவி தயை நிரம்பி ஏவி உனை விரும்பிக் கூவி அழைக்கையிலே தாவி யேசுவை நோக்கி - பாவி
1.பாவம் தொடர்ந்து செல்லுமே; - பாவ சாபம் அடர்ந்து கொல்லுமே; - உனின்ப லாபம் எல்லாமே சாபம்; காலமிதுவே காலம்; தாபம் உளவுன் யேசு மா பரிதாபம் கண்டு - பாவி
2.எத்தனை போதனை பெற்றாய் - ஐயையோ! சுத்தமாய்ச் சாதனை அற்றாய், - என்றாலும் அத்தனை பாவத்தையும் முற்றுமாக வெறுத்து, அத்தனே, தத்தம் செய்தேன், நித்தமும் காவுமென்று - பாவி
3.கல்வாரியில் தொங்கினோர் யார்? - உனக் கல்லோ நேசர் ஏங்கினோர் பார்! - இன்னும் பொல்லா மனதுடனே கல்போல் கடினமாகிச் செல்வோரையும் நிந்தித்து எல்லாக் கேட்டுக்குள்ளான - பாவி
4.நிலை யின்றலை கின்றோரே - ரத்த விலை மதியாமல் சென்றோரே, - போதும்; மலையாமல் யேசுவிடம் தொலையாத கவலை சொல்லி, உலையா நம்பிக்கை வைத்து நிலையான ரட்சைபெற - பாவி
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal