பாவம் போக்கும் ஜீவநதியை
paavam pokkum jeevanadhiyai
பாவம் போக்கும் ஜீவநதியைப் பாரீர், வந்து பாரீர் - பாரில்!
தீவினை தீர்க்கும் தேவமறியின் திருரத்த மிந்த ஆறாம், - பாரில்! - பாவம்
1.கல்வாரி மலைச்சிகர மீதூற்றுக் கண்கள் ஐந்து திறந்தே; - அதோ! மல்கிச் சிலுவை யடியில் விழுந்து வழிந்தோடுவது பாரீர், - பாரில்! - பாவம்
2.பாவச்சுமையால் நொந்து சோர்ந்து பதறி விழுந் தலறி - நிதம் கூவியழுத அனந்தம் பேரிதில் குளித்தே யுளங் களித்தார், - பாரில்! - பாவம்
3.பத்தருளத்தி லிடைவிடாமல் பாய்ந்து வளமீந்து - அதை நித்தமும் பரிசுத்த குணத்தில் நிலைநாட்டுது பாரீர், - பாரில்! - பாவம்
4.ஒருமுறை இந்த நதியின் தீர்த்தம் உண்டோர் ஜீவன் கண்டோர், - தாகம் அறுதி யடைவர்; வேறொருநதிக் கலையார், தேடி யலையார், - பாரில்! - பாவம்
5.நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந் நீரார் நதியிதிலே - தங்கள் வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில் வாழ்ந்துகீதம் பாட, - பாரீல்! - பாவம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal