பாருங்கள் தொடரந்து வாருங்கள்
paarungal thodarandhu vaarungal
பாருங்கள், தொடரந்து வாருங்கள், கொல்கொதா பாதையிற், கோதையிதே
ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார் -பாருங்
1.பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே புங்க உடலெல்லாம் புழுதிகள் படியுதே நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே
2.பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியதே பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே நாபிக்கமலமே பற்றிக் கோபித்துக் கரியுதே நடையுமுடையுந் தொய்ந்து சதைகளும் சரியுதே
3.துன்ப துரிதத்திலும் அன்பையே பொழிகினிறார் துட்டர்கள் அதற்காகத் திட்டுகள் மொழிகின்றார் அன்பாய்ப் பிழைக்கத் தமதாவியைக் கெடுக்கின்றார் அந்தோ நசரேத்தையர் நொந்தடி எடுக்கின்றார்
4. திருமுக அருள் ஒன்றும் தெரியாதடைந்ததே, செங்குருதி களெல்லாம் பொங்கி வடிந்ததே, சருவ வல்லபம் குன்றித்திறையும் நிறைந்ததே, ஜகமும் பரமுந் துக்க சாகரத்தழுந்துதே.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal