பார்க்க முனம் வருவேன்
paarkka munam varuven
பார்க்க முனம் வருவேன்; - நெருக்கத்தில் பத்ரமாகக் கரிசித்த மேசியாவை.
ஆர்க்கும் இரங்கும் பராபரனின் சுதன் அன்பின் மனுடவ தாரத்தைச் சிந்தித்து, - பார்
1. நிச்சய சாதாரண சத்திய வேதனை, நின்மல ஞான வரப்பிரசாதனை, உச்சித வாக்ய சுவிசேட போதனை, உன்னத ரட்சகர் கிறிஸ்தேசு நாதனை. - பார்
2.முற் பிதாக்கள் விரும்பிய தேட்டம், முன்னே ஆதிப் பிதாவின் சிரேட்டம், எப்பு விக்கும் எவர்க்கும் கொண்டாட்டம், எந்தையின் சுதன் மேல் என்றன் நாட்டம். - பார்
3.ஆசைக் கிறிஸ்துண்மை யான நல் ஆயனை, ஆத்தும நாயகர் ஆன என் நேயனை, பாச வலையில் கை தூக்கின நாயனை, பட்ச மொடு காத்த முக்ய சகாயனை. - பார்
4.ஆச்சரிய மான நேசத்தைப் பாசத்தை, அன்பின் திருமுகத்தை, ஐந்து காயத்தை, காட்சி தரும் இரு பாதத்தைப், பாவியைக் கைதூக்கி விட்ட கரத்தை, உரித்தாக, - பார்
5. திரித்துவத்தின் மகத்துவவே தம் பொறுத்த வுண்மை பரிசுத்த போதம் மறுத்தவர்க்கு வழங்கிய நீதங் கிறிஸ்து நாதர் தந்தேவ பொற் பாதம்
6. யெருசலே மிசறேலரின் சொந்தம் பரம சேனைகள் பாடும் பிரபந்த முருகும் நெஞ்சக் கருணை யானந்தந் திரு மனுவேலர் பாதார விந்தம்.
7. சித்திர நெல்லையான் பாட்டின் விவேக நித்திய தேவ பிரிய சினேகப் பெத்தலேகே மாட்டுக் கொட்டிற்குளேக அத்தியந்த பய பத்தியதாக.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal