பாலர் நேசனே
paalar nesanae
பாலர் நேசனே - மிகப்பரிவு கூர்ந்திந்த பாலரை யேந்தி - ஆசீர்வதியும் யேசுவே.
1. பாலர் வந்திடத்தடை பண்ணொனா தென்றீர் சால வந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர். - பாலர்
2. வான ராஜ்யம் இவர் வசத்த தென்றீரே பிரதிஷ்டையால் உந்தன் நாமஞ் சூட்டுவீர். - பாலர்
3. கானம் பாடியே பாலர் கர்த்தரே யுமைத் தானே ஓசன்னா! எனச் சத்தமிட்டாரே. - பாலர்
4. தேவ பாலனே நீரும் சிறிய பிள்ளையாய் மேவினீ ரதால் உம்மை வேண்டினோமையா. - பாலர்
5. ஆவியால் இவர் ஞான அபிஷேகம் பெற ஜீவ நேசரே அருள் சிறுவர்க் கீவீரே. - பாலர்
6. தாசர் நாங்கள் செய் வாக்குத்தத்தம் மீறாமல் நேச யேசுவே எமை நிலை நிறுத்துவீர். - பாலர்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal