பாக்கியர் இன்னார்
paakkiyar innaar
பாக்கியர் இன்னார் - என்றிறைவன் பண்புடன் சொன்னார்.
ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில். - பாக்
1.ஆவி பணிந்தோர், - மனத்தாழ்மை - யான தணிந்தோர், பாவிகள் தாமென்று பயந்து நடப்போர் தேவனின் ராஜ்யம் சேர்வதால் பாக்கியர். - பாக்
2.துக்கப்படுவோர், - பவத்துக்காய்த் - துயரப்படுவோர் விக்கினமின்றி எந் தேவன் அருளினால் மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்கியர். - பாக்
3.சாந்த குணத்தோர், - சண்டை கோப - தாபம் வெறுத்தோர், வந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர் மேதினி வாழ்விலும் விண்ணிலும் பாக்கியர். - பாக்
4.நீதியின் பேரில் - பசி தாகம் - நித்தம் கொள்வோரில் போத மெய்ப் புத்தியும் பூரண பத்தியும், காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர். - பாக்
5.இரக்க முடையோர், பிறர்மீது - உருக்கமுடையோர், நெருக்கப்படுவோர்க்கு நேயமுற்றுதவுவோர் பெருக்க இரக்கம் பெற்றிடும் பாக்கியர். - பாக்
6.சுத்தநெஞ்சத்தார், - தேவனருள் - சுகிர்த ஜென்மத்தார் பத்தியில் வர்த்தித்து நித்தமும் தேவனின் பரிசுத்த சமுகத்தைத் தரிசிக்கும் பாக்கியர். - பாக்
7.சமாதானத்தை - நடப்பித்துச் - சல்யம் வாதத்தைத் தமதுரை நடக்கையால் தள்ளி ஒழுகுவோர் நமதேகன் சேயர்கள் என்னும் மெய்ப்பாக்கியர். - பாக்
8.நற்செய்கை யிட்டுப் - பகைஞரால் - நஷ்டங்கள் பட்டுத் துர்ச்செய்கை நீங்கியே துன்பப் படுவோர் சுகலோகம் சேர்ந்தென்றும் முகியாத பாக்கியர். - பாக்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal