பாடித் துதி மனமே
paadith thudhi manamae
பாடித் துதி மனமே பரனைக் கொண்டாடித் துதி தினமே
நீடித்த காலமதாகப் பரன் எமை நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து
1. தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச் செப்பின தேவபரன் இந்தக் காலத்தில் மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் - பாடி
2. சொந்த ஜனமான யுதரைத் தள்ளித் தொலையில் கிடந்த புறசாதியாம் எமை மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் - பாடி
3. எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர் எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள், எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்-கு இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் - பாடி
4. காட்டொலிவத் தருவா மெமைநல்ல கனிதரும் தீவிதாட்சிச் செடியோடுற நாட்டித்தஞ் சொந்தச் சனமாக முற்றும் நடத்தின நேரைத் திடத்துடன் சிந்தித்துப் - பாடி
5. வேதாகமங்களை அச்சினிற் போட்டு விலையன்றி எங்கட் கிலவசமாய்த் தந்து சாதாரணச் சுவிசேடத்தைப் போதிக்க சற்குருமாரை யனுக்கிரகஞ் செய்ததைப் - பாடி
6. அக்கியான தேசத் திருளையகற்ற அநேகரைத் தூரத்திருந்திங் கழைத்தபின் இக்கணத் தெங்கள் குலத்திலும் போதக ரென்னச் சிலரை யிஸ்தாபித்த நேசத்தைப் - பாடி
7. காலத்தை நேரத்தை யாற்றும சரீரத்தைக் கட்டளை யிட்ட பரனுபகாரத்தைச் சீலத்துடன் வேதநாயன் பாடின திட்டத்தையும் நினைந் திஷ்டத்துடன் தினம் - பாடி
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D F#m Bm G D D G D D G D D G D D G D D G D G A D D G D D G D D G D G A D D G D D G D D G D G A D
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal