ஒருவரும் சேராத ஒளியில்
oruvarum seraadha oliyil
ஒருவரும் சேராத ஒளியில் வாசம் செய்யும் மெய் தெய்வமே - வேறு -2 அந்த ஒளியில் என்னை அழைத்து உந்தன் ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வீரே-2
ஹால்லேலூயா ஹா..ஹா.. ஹால்லேலூயா-2
1- நிம்மதியற்ற வாழ்வும் வேண்டாம் நிலையற்ற உலக மேன்மை வேண்டாம்-2 நீதியில் நிலைத்து உம்மை சேர எந்த தியாக வேள்வியிலும் நான் வெல்வேன்-2
அந்த மகிமை என்ன சொல்ல ஆஹா எந்தன் உள்ளம் ஆனந்திக்குதே-2
2- பொன்னும் பொருளும் செல்வம் ஏதும் வேண்டாம் பொன்னான இயேசு நீரே போதும்-2 மண்ணான மாய வாழ்வைத் தள்ளி-தேவ மகிமையின் பிரசன்னத்தில் வாழேவேன் -2
3- இந்த பூமி எனக்கு சொந்தமில்லை -இங்கே எனது மனமே தங்கி நிற்கவில்லை-2 எனது நெஞ்சின் ஆசை ஏக்கம் எல்லாம் அந்தப் பரலோகம் பரலோகமே -2
4- நகரத்தின் வாசல் சுத்தப் பொன்னாம் அஸ்திபாரமெல்லாம் இரத்தினக் கல்லாம்-2 துன்பம் துயர் அற்று ஜீவ நதியில் இன்பக் களிப்பில் மூழ்கி நீந்தி மகிழுவேன்
More from Jeevanathiye Ezhuputhal Paadalgal
- அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதேasthibaarangalum nirmoolamaagiradhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- இந்த ஆண்டு முழுவதும்indha aandu muzhuvadhumPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உமக்கு நிகரானவர் எவருமில்லைumakku nigaraanavar evarumillaiPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உள்ளத்தை ஜீவ பலியாக்குவதேullathai jeeva paliyaakkuvadhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- கண்ணீரைத் துடைப்பவர்kanneeraith thudaippavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்seeyonilirundhu unnai aaseervadhippaarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- செங்கடல் ஊடாய் வழி திறந்தவர்sengadal oodaay vazhi thirandhavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- நீர் போதுமே என் வாழ்விலேneer podhumae en vaazhvilaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal