அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே
asthibaarangalum nirmoolamaagiradhae
அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே நீதிமான் என்ன செய்திடுவான்-2 உம்மையே நாங்கள் நம்பி நிற்கிறோம் நீதிபரரே தயவாய் இறங்கும்-2
கண்ணோக்கிப் பாரும் விடுதலை தாறும் தாமதமின்றி இரட்சிப்பை அருளும் -2
1- தேசம் பாழாகி நாளாகிப் போனதே அக்கிரமம் அணியாயம் தலைவிரித்து ஆடிடுதே-2 நீதியாய் வாசம் செய்யும் ஒரு கூட்ட ஜனங்களோ-2 உமது நாளுக்காக காத்திருக்குதே உமது வருகைக்காக காத்திருக்குதே
2- உம்முடைய வேதத்தையும் உம்மையும் மறந்ததினால் தீவினைகள் தேசத்தின்மேல் தீவிரமாய் வருகிறதே-2 விடுவிப்பார் யாருமின்றி நிற்கதியாய் நிற்கின்றோம்-2 விடுதலை நாயகனோ விடுதலை தாருமையா ஜனங்களின் சிறையிருப்பை மாற்றிடுமையா
3- உமது பார்வைக்கு பொல்லாப்பு செய்பவர்கள் எந்நாளும் சுகித்திருந்து வாழ்ந்திடக் கூடுமோ-2 விலையின்றி விற்க்கப்பட்டோம் பணமின்றி மீட்டுக்கொள்ளும் -2 சிறுமையானவரின் கதறலைக் கேட்பவரே எங்களுக்காய் எழுந்திருந்து வழக்காடிடுமே
4- தண்ணீரும் விறகும் கூட விலைக் கிரயமாய் வருகிறது பாரஞ்சுமந்து எங்கள் கழுத்தெல்லாம் நோகிறது-2 அடிமைகள் ஆளுகிறார்கள் விடுவிப்பார் எவருமில்லை-2 உம்மையன்றி எங்களுக்கு வேறு ஒரு மீட்பரில்லை
5- நீர் கொடுத்த சுதந்திரத்தின் மேன்மையை உணராமல் உம்மை விட்டு தூரமானோம் அனைத்தையும் இழந்து போனோம்-2 இழந்திட்ட யாவையுமே திரும்பத் தாருமையா-2 இல்லாமை இருள் அகற்றி புது ஒளி ஏற்றுமையா சீயோனின் சிறையிருப்பை மாற்றிட வாருமையா
More from Jeevanathiye Ezhuputhal Paadalgal
- இந்த ஆண்டு முழுவதும்indha aandu muzhuvadhumPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உமக்கு நிகரானவர் எவருமில்லைumakku nigaraanavar evarumillaiPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உள்ளத்தை ஜீவ பலியாக்குவதேullathai jeeva paliyaakkuvadhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- ஒருவரும் சேராத ஒளியில்oruvarum seraadha oliyilPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- கண்ணீரைத் துடைப்பவர்kanneeraith thudaippavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்seeyonilirundhu unnai aaseervadhippaarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- செங்கடல் ஊடாய் வழி திறந்தவர்sengadal oodaay vazhi thirandhavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- நீர் போதுமே என் வாழ்விலேneer podhumae en vaazhvilaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal