நீர் போதுமே என் வாழ்விலே
neer podhumae en vaazhvilae
நீர் போதுமே என் வாழ்விலே இயேசுவே -2 உம் கிருபை அது போதுமே என் மகிமையும் பாடுமே நாள்தோறும் உந்தன் நாமம் உயர்த்துவேன்-2
என் மீட்பரே என் அருமை இரட்கா என் பிரியமே என் வாழ்க்கையின் நாயகா உந்தன் நாமம் உயர்த்தி பாடுவேன் வாழ்கிறேன் கிருபையால் பாடுவேன் உந்தன் மகிமையை உயர்த்தி
1-தாயினும் மேலாய் என்மேல் பாசம் வைத்தீரே தாங்கிடும் தயவே எந்தன் ஆறுதல் நீர்தானே-2 உம்மை மறந்தால் நான் எங்கே ஓடுவேன் உம்மைப் பிரிந்தால் நான் எப்படி உயிர் வாழ்வேன் என் தேவனும் என் ஜீவனும் நீர்தானே -என் இயேசுவே
2- உமக்குப் பிரிய மகனாக என்னை மாற்றுமே உம்முடைய வழியிலே நடத்தி ஆவியை ஊற்றுமே-2 சத்திய ஆவியே என் மேல் வாருமே நித்திய காலமாய் உம் கிருபையைத் தாறுமே என் தேவனும் என் ஜீவனும் நீர்தானே -என் இயேசுவே
3-என் வாழ்வின் வழிகளிளெல்லாம் என்னோடு வருகிறீர் நான் போகும் பாதைகளெல்லாம் நெய்யாய்ப் பொழிகிறீர்-2 எந்தன் வாழ்க்கையின் புது வசந்தம் நீர் தானே உமது வெளிச்சத்தில் நான் வெளிச்சம் காண்பேனே என் தேவனும் என் ஜீவனும் நீர்தானே -என் இயேசுவே
4- உம்முடைய திருமுகம் காண உள்ளம் ஏங்கிடுதே ஏக்கங்கள் நிறைவேற்றிட என் நேசரே வாருமே-2 உந்தன் நினைவால் நான் கரைந்தே போகிறேன் எந்தன் வாழ்க்கையின் முழு தேடல் நீர்தானே என் தேவனும் என் ஜீவனும் நீர்தானே-என் இயேசுவே
More from Jeevanathiye Ezhuputhal Paadalgal
- அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதேasthibaarangalum nirmoolamaagiradhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- இந்த ஆண்டு முழுவதும்indha aandu muzhuvadhumPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உமக்கு நிகரானவர் எவருமில்லைumakku nigaraanavar evarumillaiPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உள்ளத்தை ஜீவ பலியாக்குவதேullathai jeeva paliyaakkuvadhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- ஒருவரும் சேராத ஒளியில்oruvarum seraadha oliyilPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- கண்ணீரைத் துடைப்பவர்kanneeraith thudaippavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்seeyonilirundhu unnai aaseervadhippaarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- செங்கடல் ஊடாய் வழி திறந்தவர்sengadal oodaay vazhi thirandhavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal