ஒருபோதும் வற்றாத பேரன்பு
orubodhum vatraadha peranbu
ஒருபோதும் வற்றாத பேரன்புக் கடலில் என் வாழ்வின் படகுசெல்கின்றது... - 2 அருள்நாதர் இயேசு என் படகில் இருக்க எனக்கென்ன மனக்கவலை... - 2
துயர் என்றும் புயல் காற்று அலையாக வந்தால் என் நேசர் எழுந்து அதட்டிடுவார்... - 2 ஆறுதல் அடைவேன்... அமைதியும் பெறுவேன்... - 2 பயமின்றி தினமும் நான் பயணம் செய்வேன்... - 2
இருள் என்னும் இன்னல்கள் எமைச் சூழும் நேரம் ஜெபம் என்னும் ஒளியேற்றி வழிகாணுவேன்... - 2 பரிசுத்த ஆவியே... கலங்கரை விளக்கம்... - 2 சரியான தேசத்திற்கு கொண்டு போவார்... - 2
நிலையான பொன் நகரம் நான் காண வேண்டி அயராத ஜெபம் என்ற தண்டு வலிப்பேன்... - 2 ஆறுதலின் தேவன்... ஆண்டவர் இயேசு... - 2 அவரோடு எந்நாளும் நான் வாழுவேன்... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu