ஒப்பிலா மெய்ப் பொருளே!
oppilaa meyp porulae!
1 ஒப்பிலா மெய்ப் பொருளே! உன்னதக் கடவுளே! எப்படி உம்மைப் போற்றுவேன்- என் நாவினால் எப்படி உம்மைப் போற்றுவேன் மெய்ஞ்ஞான மணியே மோன வொளியே! வானோர் பணியே! நானோ யெளியன்! - ஒப்
2 நீரே எனைப் படைத்தோர் எனைப் பாதுகாத்தவர் சேயே உமக்கு நானையா - நசரேசையா! சேயே உமக்கு நானையா கொடும் பேயு மாய புவியு மென்றன் காயமு நழன்றெனை கலக்க நொந்தேன். - ஒப்
3 நொந்து வந்தேனே உள்ளம் நொந்து வந்தேனையா சொந்தம் பாராட்டி மேசையா! - நசரேசையா! சொந்தம் பாராட்டி மேசையா! பந்தப் பாசமறவுல் லாசங் கெடவே நீச வுலகி னாசை விடவே. - ஒப்
4 அப்பனைப் போலதட்டி அன்னையைப் போலணைத்து எப்படி யேனு மேசையா - கிறிஸ்தேசையா எப்படி யேனு மேசையா உனை நாடிட கவிபாடிட வினை ஓடிட கதிகூடிட வருள். - ஒப்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal