ஓகோ யேசுவின்
ogo yesuvin
ஓகோ யேசுவின் நேசமதுரமே உணர்வாயே பாவி
1. ஓகோ நேசமதுயரமே நீளமோடாழம் வாகாய்ச் சுரர்நரர் வழுத்துதற் கரிதே.
2. மாகொடும் பாவம தாலழும் பாவியே ஏக தயாபரர் ஸ்நேகமே யுணர்வான்.
3. பாதகந்தீர்க்க இப்பூதலந் தனிலே நாதனின் அன்புபோலே யேதும் உளதோ?
4. சத்ரு பூலோகந்த் தயாபர நேசம் வைத்த பொருளிதை மறந்திடலாமோ?
5. நீ பிறவாமுன்னே நின்னை நேசித்தே சாப நிவர்த்திசெய் சற்குரு நோக்கு.
6. நின்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்த உன்னத நேசம் ஒப்புள தாமோ?
7. தீவினை தீர்க்கும் தூய்மை யுண்டாக்கும் சாவினைப் போக்கும் சற்குரு நேசம்.
8. இக்கணம் யேசுவையே விசுவாசி அக்கினி மரணம்போல் அன்பதுபலமாய்.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal