நித்தம் அருள்செய்
nitham arulsey
நித்தம் அருள்செய் தயாளனே! - எங்கள் நேசா யேசு மணாளனே! - ஸ்வாமி நித்தம்.
உத்தம சற்குண தேவ குமாரா! - உம்பர்கள் சந்ததம் போற்றும் சிங்காரா! சத்திய வேதவி னோதலங்காரா! - சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா! - நித்தம்
1.பட்சப் பரம குமாரனே, எங்கள் பாவந்தீரும் மாவீரனே ஸ்வாமி! அட்சய சவுந்தர ஆத்துமநாதா, அடியவர் துதிசெய்யும் ஆரணபோதா, ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா, ராசகெம்பீர, சங்கீத பொற்பாதா. - நித்தம்
2.சென்றாண்டெமை முகம் பார்த்தவா, ஒரு சேதம் விக்கின மறக் காத்தவா, - ஸ்வாமி! இன்றோர் புதுவரு டாரம்பங் கண்டோம், ஏக சந்தோஷ மாய்ச் சந்தித்துக் கொண்டோம்; குன்றா உமதுநல் லாவியை ஈந்து கூடவே இருந்தடியார் ஜெபங்கேட்டு, - நித்தம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal