நினையேன் மணம்
ninaiyen manam
நினையேன், மனம், நினையேன் தினம் உனை மீட்ட யேசுவையே.
கனமேவிய மனு வேலனைக் கன காசன சுதனை. - நினை
1.கவன முடன் நீடி, உனக் காக அருள் தேடிப், புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச் சிறந்து, தவன முறு ஆத்மா ஜீவ தண்ணீர் கொள, சும்மா பவம் நீக்கிய வானாசனப் பதியை, சுரர் கதியை - நினை
2.நரக அழலாலே கெடு நாசம் வந்த காலே உருகி, மனம் இரங்கித், தொலைத் துண்மையுடன் இணங்கி, பரமனோடு உறவாக்கி, மெய்ப்பலனும் பெறத் தாக்கி, பெருக நலம்புரிந்தோன், மறை பேதம் இன்றி அறைந் தோன். - நினை
3.ஜெயமும், புத்ர சுவிகாரமும், சிறந்த நீதியும், மகா நயந்த பரிசுத்தம் தேவ ஞானமுடன் மீட்பும் சுயமாக்கியும் அளித்தும் தனதுயிரைப் பலிகொடுத்தும் பயன் ஏலவே, தூய ஆவியைப் பரிந்தோனையே கனிந்தே, - நினை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal