நிலையில்லா வாழ்வினில் நிம்மதி தருவது
nilaiyillaa vaazhvinil nimmadhi tharuvadhu
1.நிலையில்லா வாழ்வினில் நிம்மதி தருவது எது? எனக்காய் ஜீவனைத் தந்த என் தேவனை என்றுமே துதிப்பது அது
2. மரண இருளினில் நடந்தாலும் உன்னைத் தைரியப் படுத்துவது எது? என்றுமே என்னோடு வருகின்ற தேவனின் வசனத்தின் வார்த்தைதான் அது
3. எந்தச் சூழ்நிலையிலும் புது மகிழ்ச்சியாய் இருக்கவே கற்றுக்கொடுத்தது எது? குறைவுகளெல்லாம் நிறைவாக்கும் எங்கள் கிறிஸ்துவின் பிரியம்தான் அது
4. பெலவீன நேரத்தில் சோர்ந்திடும் வேளையில் உன்னைத் தாங்கிடும் பெலன்தான் எது? கன்மலை வெடிப்பினில் வைத்தென்னைக் காக்கும் என் தேவனின் கரம்தான் அது
5. மாமிச உலகினில் ஆவியின் வாழ்க்கையில் உன்னில் ஜெயிப்பது எது? பாவத்தை கண்டிக்கும் பரிசுத்த ஆவியின் சத்திய வல்லமை அது
6. பாவத்தின் சாபத்தில் வீழ்ந்திட்ட உந்தன் கறைகளைத் துடைத்தது எது? எனக்காய் சிலுவையை சுமந்த என் இயேசுவின் பரிசுத்த இரத்தம்தான் அது
7. அறிவும் புத்தியும் யோசனையும் உனக்கு அள்ளித் தருவது எது? ஆதியும் அந்தமும் ஆன பிதாவுக்கு பயப்படும் பயம்தான் அது
8. உண்மையாய் உன்னை ஆவியின் பாதையில் வளரச்செய்வது எது? ஆண்டவர் சமூகத்தில் அனுதினம் அமர்ந்து ஜெபித்திடும் ஜெபம்தான் அது
9. நீ கெட்டுப்போகாமல் பாது காக்க உன்னைத் தொட்டு தூக்கியது எது? எனக்காய் சொந்த குமாரனைக் கொடுத்த என் தேவனின் அன்புதான் அது
10. மொத்தமாய் உந்தன் அத்தனை நடத்தையும் நன்மையாய் நடப்பிப்பதெது? பரிசுத்தத்தோடு பயபக்தியோடு நம்பிடும் விசுவாசம் அது
11. சகலமும் படைத்த தேவனும் உன்மேல் இரங்கிடச் செய்தது எது? இரக்கமும் உருக்கமும் நிறைந்த என் தேவனின் இணையில்லா கிருபைதான் அது
12. மரணம் பிரித்திடும் வேளையில் மறுபடி தேவனில் இணைப்பது எது? மரணத்தை ஜெயித்த இயேசு கொடுத்த நித்திய ஜீவன்தான் அது
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal