நேசபரனைத் துதிப்பாய்
nesabaranaith thudhippaay
நேசபரனைத் துதிப்பாய, ஓ நெஞ்சமே!
தாசன் புவியோரில் மா நீசனெனைப்பிடித்த மோசம் நிவிர்த்தி செய்த யேசுக்ருபாசமுத்ர. - நேச
1.மரணம் பிடித்துமென்னை வல்லவன் விடுத்தார்; வலிய பாதாளம் நின்றே மகிமையா யெடுத்தார், சரணமென்றே புது உயிர்தனைக் கொடுத்தார்; சத்ரு எனக்குச் சேதம் புரியாது தடுத்தார். - நேச
2.பாதக னெனக்குண்டோ கொஞ்சமும் பாத்திரம்? பரனருள் நன்மைக் கிப்பாவி எம்மாத்திரம்? தீதன் ருசித்த நலம் அன்பு மா காத்திரம், செப்புவேன் இங்குமங்கும் எளியனின் தோத்திரம். - நேச
3.அடியனுக்கவர் செய்த அன்புரைத்தாமோ? ஆயிரம் நாவினால் சொல்வது போமோ? இடிதனைத் தாங்கிட மனிதராலாமோ? இயேசெனைத் தாங்கையில் என்னுயிர் போமோ? - நேச
4.உள்ளும் புறம்புமான எந்த வில்லங்கம் உலகிலெனக்கு வரும்? எவ்விதப் பங்கம் தள்ளியே காத்திடும் தகும் யூதா சிங்கம், தாரணியினில் தனக்கிணையிலாத் தங்கம். - நேச
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal