நெஞ்சுருக என்னை அணைத்து
nenjuruga ennai anaithu
நெஞ்சுருக என்னை அணைத்து நெடுந்தூரம் கையைப்பிடித்து தாயைப்போல தூக்கி எடுத்து தந்தையாய் எனக்கு புத்தி சொல்லும் எங்க இயேசவைப் போல யாருமில்ல அவர் உங்களுக்கும் ரொம்ப தூரமில்ல-2
காலைதோறும் என்னை எழுப்பி கற்றுக் கொள்ளக்கவனிக்கச் செய்து கண்ணு காதெல்லாம் திறந்து வச்சு கல்விமானின் நாவைத் தந்த
என் ஆலோசனைக் கர்த்தர் இயேசு இருக்க துர் ஆலோசனையெல்லாம் தூரமிருக்கும்-2
வெட்டவெளியில கண்டுபிடித்தென்னை வெட்டியாக விட்டு விடாமல் வெறுமையெல்லாம் நிரப்பி நல்லா என் வேலை செய்யுன்னு அனுப்பினவர் எஜமான்இயேசுவுக்காய் நான் ஓடுறேங்க அவர் ராஜ்யமும் நீதியும் தேடுறேங்க-2
ஓநாய் கூட்டத்து மத்தியில உள்ளே நுழைஞ்சேன் ஒத்தையில வீணாய் நானும் போகக்கூடாதுன்னு தானாய் வந்து தைரியம் கொடுக்கும் இயேசு இருக்கையில பயமுமில்ல நான் எப்பொழுதும் இயேசுவுக்கு பயந்தபுள்ள-2
பரத்துக்கென்னை சொந்தமாக்க பணயம் வச்சாரு தன் உயிரை ஜீவன் எனக்கு தந்ததுமல்லாமல் தயவும் பாராட்டி தகுதிப்படுத்தும் என் இயேசுவுக்காய் எங்கும் போவேனுங்க இன்னும் நீசனும் அற்பனும் ஆவேனுங்க-2
பட்டும் படாம வாழ்ந்திருந்தேன் பாக்குறதெல்லாம் ஆசப்பட்டேன் கேக்குறதெல்லாம் கிடைக்குன்னு கேள்விப்பட்டும் சாக்குபோக்கு சொல்லி தப்பிக்க நினச்ச என் இருதயத்த இயேசப்பா கேட்டாருங்க அவர் பிடிச்சார்னா விட்டுவிட மாட்டாருங்க-2
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal