நெஞ்சே நீ கலங்காதே நான் என் செய் வேனென்று
nenjae nee kalangaadhae naan en sey venendru
நெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின் ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று.
வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் - நெஞ்சே
1.வினை மேல் வினை வந்தாலும் பெண்சாதிபிள்ளை மித்திரர் சத்துரு வானாலும் மனையொடு கொள்ளை போனாலும் வானம் இடிந்து வீழ்ந்தாலும்
2. கவலைகள் மிகக் கொண்டாலும் பிசாசுகளைக் கண்ணின் முன்னே கண்டாலும் எவர்கள் துன்பஞ் செய்தாலும் எதிரிகள் எல்லாம் வைதாலும்
3. ஆதிசற்பம் பொரிந்தாலும் பொல்லாத பேர்கள் அக்கினிபோ லெரிந்தாலும் பாதியுடல் மெலிந்தாலும் பட்டினியே கிடந்தாலும்
4. பட்டையம் பஞ்சம் வந்தாலும் அதிகமான பாடு நோவுகள் மிகுந்தாலும் மட்டிலா வறுமைப் பட்டாலும் மனுஷரெல்லாம் கைவிட்டாலும்
5. சின்னத்தனம் எண்ணினாலும் நன்மை செய்யத் தீமைதானே பண்ணினாலும் பின்ன பேதகஞ் சொன்னாலும் பிசாசு வந்து நாப்பினாலும்
6. கள்ளனென்று பிடித்தாலும் விலங்கு போட்டு காவலில் வைத் தடித்தாலும் வெள்ளம் பிரண்டு தலை மீதிலலை மோதினாலும்
7. வேதநாயகன் எந்நாளும், பதங்கள் பாடும் மேசியா வந்துன்னை யாளும் ஏதித சத்தியச் சொல்வோ இயேசு உன் ரட்சகரல்லோ
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal