நீர் படைத்த சிருஷ்டிகள்
neer padaitha sirushtigal
நீர் படைத்த சிருஷ்டிகள் ஒவ்வொன்றும் அழகு உம் வசனத்தின் வார்த்தைகள் எல்லாமே அழகு நீர் இல்லாத ஒரு வாழ்க்கை யார்க்கென்ன அழகு நீர் சொல்லாத ஒரு வார்த்தை இருந்தென்ன அழகு
அதிகாலையில் உம்மைத் தேடுகையில் உம் ஆலோசனை அவை ஒவ்வொன்றும் அழகு சில நேரத்தில் நான் தவறுகையில் என் சிந்தனையில் தட்டி திருத்துவது அழகு நீர் எப்போதும் எனக்காக பரிந்துரைத்தல் அழகு நான் இப்போதும் உமக்காக காத்திருத்தல் அழகு
மலைபோல எழும்பிடும் எதிர் வல்லமை அதை பனிபோல கரைத்திடும் உம் கிருபை அழகு சூறாவளி என்ன சுழல் காற்றும் தான் என்ன சூழ்நிலையை மாற்றும் உம் பதிவிடைகள் அழகு நீர் எனக்காக செய்கின்ற யுத்தங்கள் அழகு நான் கணக்காக கேட்கும் உம் சத்தங்கள் அழகு
உபத்திரவத்தின் ஒரு குகை நடுவினில்-என்னை தெரிந்தெடுத்து மீட்ட உம் இரட்சிப்பு அழகு ஒரு சாட்சியாய் எனை உம்முன்னே நிறுத்தி நான் உமைப்பற்றி சொல்கின்ற சுவிசேஷம் அழகு உம் கற்பனையும் கட்டளையும் கடைபிடிப்பதழகு உம் கரம் பிடித்து காலமெல்லாம் வழி நடப்பதழகு
நீர் அழகைய்யா நின் பேர் அழகைய்யா நேர் நிகரில்லா தயை காட்டும் அன்பழகைய்யா எதைச்சொல்வதோ நான் எதை விடுப்பதோ உம் நாமத்தை நினைத்தாலே நினைப்பழகைய்யா நான் உமக்காக சுமக்கின்ற பாரங்கள் அழகு நீர் எனக்காக ஒதுக்கும் உம் நேரங்கள் அழகு
நீர் படைத்த சிருஷ்டிகள் ஒவ்வொன்றும் அழகு உம் வசனத்தின் வார்த்தைகள் எல்லாமே அழகு நீர் அழைக்கின்ற மனிதரெல்லாம் பிழைக்கின்றதழகு உமை நினைக்கின்ற யாவரையும் அணைக்கின்றதழகு
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal