நீர் இல்லாத வாழ்வேயில்லை
neer illaadha vaazhveyillai
நீர் இல்லாத வாழ்வேயில்லை இயேசையா நான் உம்மை விட்டு எங்கே போவேன் இயேசையா 2
என் உறவும் நீரே என் உயிரும் நீரே 2
நான் நடந்தாலும் படுத்தாலும் என்னை சூழ்ந்து இருக்கிறீர் என் வழிகளை எல்லாம் முன்னமே தெரிந்திருக்கிறீர் 2 உம்மை விட்டு எங்கே போவேன் நீர் இல்லாத இடம் இல்லையே 2
நான் உட்கார்ந்தாலும் எழுந்தாலும் நீர் அறிந்திருக்கிறீர் என் நினைவுகள் எல்லாம் தூரத்திலிருந்து அறிந்திருக்கிறீர் 2 உம்மை விட்டு எங்கே போவேன் நீர் இல்லாத இடம் இல்லையே 2
முன்னும் பின்னும் எனை நெருங்கி கரத்தை வைக்கின்றீர் என் நாவில் சொல் உண்டாகும் முன்னே அறிந்திருக்கிறீர் 2 உம்மை விட்டு எங்கே போவேன் நீர் இல்லாத இடம் இல்லையே 2
வானத்துக்கு ஏறினாலும் அங்கே இருக்கின்றீர் பாதாளத்தில் படுக்கை போட்டால் அங்கேயும் இருக்கின்றீர் 2 உம்மை விட்டு எங்கே போவேன் நீர் இல்லாத இடம் இல்லையே 2
என் தேவனின் அறிவு எட்டாத உயரமானது தேவ ஆவிக்கு மறைவாய் நான் எங்கே ஓடுவேன் 2 உம்மை விட்டு எங்கே போவேன் நீர் இல்லாத இடம் இல்லையே 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae