நீதியாமோ நீர் சொல்லும்
needhiyaamo neer sollum
நீதியாமோ நீர் சொல்லும் ஓய் நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில்
ஆதுலர்க் கீவதே பாக்கியம் பிறரை ஆதரித்திடுவதே யோக்கியம் ஓகோ பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் மோட்ச பாதை நடக்கில் சிலாக்யம் - நீதி
தரித்திரக் கிரங்குவோன் உடனே இடுவான் தற்பரனுக் கவன் கடனே என்று கருத்துடன் கருதியில் திடனே உரைத்தார் கடுநெஞ் சகல் மானிடனே - நீதி
அன்புடன் விதவையும் போட்ட காசை அதி வியப்பாய் யேசு காட்டப் புகழ் இன்புடன் அவள் மிசை சூட்ட அதை எவர்களும் அகத்தினில் நாட்ட - நீதி
பிறர் புகழும்படி இன்றே செய்தால் பிரயோசனமிலை என்றே பரன் மறையதில் விளம்பினார் நன்றே அம் மாதிரி விலகாது நின்றே - நீதி
பரிதானம் வாங்குதல் தீது - அதைப் பறித்தறம் செய்தல் தகாது உமக் குரியதில் ஈவேது போதம் இதில் ஊன்றி இருப்பதே நீதம் - நீதி
ஏழைகட் கீயாது ஆஸ்தி ஐயே ஈண்டு சேர்ந்திடில் என்ன கீர்த்தி இதோ வாழுல கடைந்திடில் நேர்த்தி என்றும் வாழலாம் அதுவே மா பூர்த்தி - நீதி
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal