நன்றியில்லாமா துதியும் சொல்லாமா
nandriyillaamaa thudhiyum sollaamaa
நன்றி இல்லாமா துதியும் சொல்லாமா எப்படித்தான் நான் வாழ்வது இயேசையா எப்படித்தான் நான் வாழ்வது - 2
1. எங்கேயோ கிடந்த என்னை வாழ வைத்தீரே எப்படியோ வாழ்ந்த என்னை உயர்த்தி வைத்தீரே - 2 நன்றி சொன்னால் போதுமா - இயேசையா என்னையே உனக்குத் தருகிறேன் - 2
2. பாவத்தில் இருந்த என்னை பரிசுத்தமாய் மாற்றினீரே சேற்றில் கிடந்த என்னை சென்னீரால் கழுவினீரே - 2 நன்றி நன்றி ஐயா - உமக்கு கோடா கோடி நன்றி ஐயா - 2
3. எத்தனாய் இருந்த எண்ணை ஏற்றுக்கொண்டீரே பித்தனாய் வாழ்ந்த என்னை உத்தமனாய் மாற்றினீரே - 2 நன்றி நன்றி ஐயா - உமக்கு கோடாகோடி நன்றி ஐயா - 2
4. பாடுகளை ஏற்றுக்கொண்டீர் பாவிகள் எங்களுக்காய் துன்பங்களை ஏற்றுக் கொண்டீர் துன்மார்க்கர் எங்களுக்காய் - 2 எப்படி நான் நன்றி சொல்வேன் - உமக்கு என்ன சொல்லி நன்றி சொல்வேன் - 2
5. ஆறுதல் கொடுப்பதற்காக ஆணிகள் அடிக்கப்பட்டீர் எங்களை வாழ வைக்க சிலுவையில் உயிர் கொடுத்தீர் - 2 எப்படி நான் நன்றி சொல்வேன் - உமக்கு என்ன சொல்லி நன்றி சொல்வேன் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae