நன்றி சொல்லி பாடுவேன்
nandri solli paaduven
நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன் நீங்க செய்த நன்மைகளைச் சொல்லிச்சொல்லி பாடுவேன்(2) நன்றி இயேசு ராஜா… நன்றி இயேசு ராஜா… -2
1. என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால் தீங்கு நாளில் என்னை காத்துக்கொண்டீர் (2)
2. ஒருவழியாய் வந்த எந்தன் எதிரிகளை ஏழுவழியாய் என் முன் ஓடச்செய்தீர் (2)
3. என் சமுகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர் போக்கிலும் வரத்திலும் என்கூட நீர் இருந்தீர் (2)
4. அனுதின உணவும் உடையும் எனக்குத் தந்தீர் உறைவிடம் பணியிடம் தகப்பனே எனக்குத் தந்தீர் (2)
5. சோதனை வேளையில் தாங்கிடும் பெலன் தந்தீர் வேதனை நீக்கி சாதனை புரிய வைத்தீர் (2)
6. செந்நீரைச்சிந்தி என் பாவம் போக்கிவிட்டீர் கண்ணீரைத் துடைத்து கவலைகள் மாற்றிவிட்டீர் - (உம்) (2)
7. இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர் இன்னல்கள் நீக்கி இன்பமாய் வாழவைத்தீர் (2) (பிறந்த நாள்)
8. இத்தனை வருடங்கள் அருமையாய் நடத்தி வந்தீர் புதியதோர் வருடத்தில் கிருபையாய் சேர்த்துவிட்டீர் (2) (திருமண நாள்)
9. இருவரை ஒருவராய் இந்நாளில் மாற்றி விட்டீர் திருமண பந்தத்தில் இனிதாய் இணைய வைத்தீர் (2)
More from Parigaari
- அப்பா உங்க வார்த்தைக்குத்தான்appaa unga vaarthaikkuthaanEvg. S. L. Edward Raj · Parigaari
- ஆசையாய் பின்தொடருகிறேன்aasaiyaay pindhodarugirenEvg. S. L. Edward Raj · Parigaari
- இதுவரையில் நடத்தி வந்தீரேidhuvaraiyil nadathi vandheeraeEvg. S. L. Edward Raj · Parigaari
- உங்க கூட உங்க கூடunga kooda unga koodaEvg. S. L. Edward Raj · Parigaari
- உயர்த்துகிறோம் உம்மைப் போற்றுகிறோம்uyarthugirom ummaip potrugiromEvg. S. L. Edward Raj · Parigaari
- என் ஏக்கமும் நீர் தான்en ekkamum neer thaanEvg. S. L. Edward Raj · Parigaari
- ஒருவராகிலும் இல்லைoruvaraagilum illaiEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றிகள் கூறிடnandrigal kooridaEvg. S. L. Edward Raj · Parigaari