அப்பா உங்க வார்த்தைக்குத்தான்
appaa unga vaarthaikkuthaan
அப்பா உங்க வார்த்தைக்குத்தான் எத்தனை வல்லமை இயேசப்பா உங்க பார்வைக்குத்தான் எத்தனை வல்லமை அப்பா உங்க கரங்களிலே எத்தனை வல்லமை -2 இயேசப்பா உங்க ஆடையிலும் எத்தனை வல்லமை -2
1. முடவன எழுந்து நடக்க சொன்ன நிமிடமே எலும்புகள் நரம்புகள் பெலனடைந்ததே எத்தனை வல்லமை உங்களுக்கு எத்தனை வல்லமை -2 வார்த்தையிலே வல்லமை பார்வையிலே வல்லமை கரங்களில் வல்லமை – உங்க ஆடையிலும் வல்லமை
2. காற்றையும் கடலையும் அதட்டினீங்களே - ஒரு சிறுபிள்ளைப் போல உடனே கீழ்ப்படிந்ததே (2)
3. கோலாகலக் கானாவூரு கல்யாண வீட்டில் - வெறும் தண்ணீரும் இரசமானது உங்க பார்வையால் (2)
4. இருளடைந்த குருடனோட கண்கள நீங்க மனமிரங்கித் தொட்டவுடன் ஒளியடைந்ததே (2)
5. பன்னிரெண்டு வருடமாக பெரும்பாடு பட்ட பெண்ணும் உந்தன் ஆடையாலே சுகமடைந்தாளே(2)
6. ஆர்ப்பாட்டந்தான் போட்டு வந்த அசுத்த ஆவிகள்- இயேசு உங்களோட வார்த்;தைக்குத்தான் அலறி ஓடியதே(2)
7. ஒருநாளும் நிமிர்ந்திராதக் கூனியைக் கண்டீர் - நிமிர் என்று சொன்னவுடன் நிமிர்ந்து நின்றாளே(2)
8. எல்லாராலும் துரத்தப்பட்ட குஷ்டரோகியை – நீர் தொட்டவுடன் பூரணமாய் சுகமடைந்தானே (2)
9. பாடையிலே சுமந்து வந்த சிறுவனின் ஜீவன் -இயேசு நீங்க சொன்ன வார்த்தைக்குத்தான் திரும்பிவந்ததே(2)
10. நாலுநாளா நாறிக்கிடந்த லாசரு அன்று உயிரடைந்து நடந்துவந்தான் உங்க வார்த்தையால்(2)
More from Parigaari
- ஆசையாய் பின்தொடருகிறேன்aasaiyaay pindhodarugirenEvg. S. L. Edward Raj · Parigaari
- இதுவரையில் நடத்தி வந்தீரேidhuvaraiyil nadathi vandheeraeEvg. S. L. Edward Raj · Parigaari
- உங்க கூட உங்க கூடunga kooda unga koodaEvg. S. L. Edward Raj · Parigaari
- உயர்த்துகிறோம் உம்மைப் போற்றுகிறோம்uyarthugirom ummaip potrugiromEvg. S. L. Edward Raj · Parigaari
- என் ஏக்கமும் நீர் தான்en ekkamum neer thaanEvg. S. L. Edward Raj · Parigaari
- ஒருவராகிலும் இல்லைoruvaraagilum illaiEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றி சொல்லி பாடுவேன்nandri solli paaduvenEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றிகள் கூறிடnandrigal kooridaEvg. S. L. Edward Raj · Parigaari