நம்பினேன் உன தடிமை நான் ஐயா
nambinen una thadimai naan aiyaa
நம்பி னேன், உன தடிமை நான், ஐயா!, - திடப் படுத்தி என்றனை - நடத்திக் காப்ப துன் கடமை தான், ஐயா.
உம்பரும் புவி நண்பரும் மற்ற உயிர்களும் பல பொருள்களும் தொழும் தம்பிரானே, மெய் யம்பராபரா, தாசன் மீது நன் னேச அருள் செய். - நம்பி
1.தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து, - திருக் கருணையின் அருள் செய்து பின் வரும் இடர்களை அறுத்து, வேதாகமப்படி என்னைத் தான் வெறுத்து - நான் உனைப்பின் செல்ல, உன் மெய் அருளை என் உள்ளத்தில் நிறுத்து; ஆதாரம் எனக்கார், உனை அன்றி? அம்புவியில் யான் நம்ப வேறுண்டோ? - உன் பாதா தாரத்தில் ஒதுங்கினேன்; எனைப் பாரும் கிருபையைத் தாரும், ஐயனே! - நம்பி
2.சுத்த இருதயத்தினைத் தருவாய்; - பரிபூரணானந்த ஜோதி ஆவியின் நல்துணை அருள்வாய், நித்தமும் பய பக்தியைத் தருவாய்; - நான் ஊழியம் செய்ய, நீதனே, எந்தன்முன் எழுந்தருளாய்; அத்தனும் பரிசுத்தனும் என தன்பனும் அனு கூலனுமான பக்தனே; பரிசுத்தனே, உனைப் பாடினேன்; கிருபை சூடி ஆள், ஐயா! - நம்பி
3.ஊக்கமும் மனத்தீர்க்கமும் வேணும் - சுவிசேஷ உரையை உற்றுப் பார்த்ததில் தேறவும் வேணும்; ஆக்கமும் அன்பர்ச் சேர்க்கையும் வேணும்; - உனக்கூழியம் செய்ய ஆவியும் அதின் ஈவதும் வேணும்; ஏக்கமும் மனக்கவலையும் நித்ய இன்பமுள்ள உன் அன்பின் நல்திரு வாக்கையே நோக்கி இருப்பதால் என்முன் வாரும், கிருபை தாரும், ஐயனே! - நம்பி
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal