நல்வழி மெய்
nalvazhi mey
நல்வழி, மெய், ஜீவன் எனும் நாம தேயனே, - உனை நம்பினேன், ஏழைக்கிரங்கி ஆள், என் நாயனே.
செல்வழி விலகு தீயர் ஜீவனில் சேர - நர ஜென்மமாம் மரித்துயிர்த்தாரே, வினைதீர; திருமறை வேதா, அருள் நிறை போதா, கருணை மெய்த் தாதா, உரிமையுள்ளெம் யேசுநாதா! - நல்
1.சத்தியத்தையே போதிக்கும் சத்தியம் நீயே; - அந்த சத்தியத்தில் நான் நடக்கச் சக்தி ஈவாயே; சுத்தமறையாம் சுவிசே ஷத்தை ஈந்தாயே; - அதின் சுத்தாங்க மெய்ம்மை உணர்த்து வித்தருள்வாயே; தொழுதகம் நேர்ந்தேன், அழுதகம் ஓர்ந்தேன், எளியனுள் சோர்ந்தேன், முழுதுமே சார்ந்தேன் உனதடி; - நல்
2.செத்த பிரேதம்போல் செயல் அற்றவன் நானே, - நல்ல ஜீவனைக் கொடுக்கும் நித்ய ஜீவன் நீ தானே; முத்தி நெறி காட்டும் மார்க்கம், சுத்த நல் தேனே, - அதின் மூலம் நான் உயிர்க்க உனதாவி ஈ, கோனே; முடவியல் மாற, நடையது தேற, அடமது பாற, திடமனதாய்க கரையேற. - நல்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal