முடியாத காரியம் ஒன்றுமில்லை
mudiyaadha kaariyam ondrumillai
முடியாத காரியம் ஒன்றுமில்லை எட்டாத நாட்கள் என்றெதுவும் இல்லை - உமக்கு அகிலலோகத்தை ஆள்பவரே உம்மாலே எல்லாமாகும் - - 2 ஐம்பூதங்களையும் ஆளுகை செய்கின்ற அதிகாரம் உம் கையிலே இயேசையா அற்புதம் நடக்குது - 2
சின்னவனை ஆயிரமாய் மாறச்செய்கின்றீர் சிறியவன் பலத்த ஆயுதமாவான் - 2 கர்த்தராகிய நீர் ஏற்றகாலத்தில் இதை தீவிரமாக செய்து முடிப்பீர் – 2
யேகோவா தேவனையே ஆராதிப்பேன் யெஷிவா கர்த்தரையே அறிக்கையிடுவேன் - 2 உயிருள்ள நாட்களெல்லாம் ஏலோயீம் தேவனையே வணங்கிடுவேன் - 2
ஆபிரகாமின் தேவனே என்னை ஆசீர்வதியும் தாவீதின் கர்த்தரே ஆளுகை செய்யும் - 2 யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமும் குறையே இல்ல - 2
கர்த்தரே பெரியவரும் துதிக்கதக்கவர் எல்லா தேவர்களில் உயர்ந்திருக்கிறீர் - 2 அகிலலோகத்தில் நீர் உயர்ந்த தேவனே எல்லா நாமத்திலும் மேலானவர் – 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini