மறவாதே மனமே
maravaadhae manamae
மறவாதே, மனமே, - தேவ சுதனை மறவாதே, மனமே, - ஒருபொழுதும்.
1.திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து, அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை - மறவாதே
2.விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு மண்ணில் ஏழையாக வந்த மானுவேலை - மறவாதே
3.கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ, மட்டில்லாத பரன் மானிடனான தயவை - மறவாதே
4.நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அளித்திவ் வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும் - மறவாதே
5.நித்தம் நித்தம் செய்த நிந்தனை பாவங்கள் அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை - மறவாதே
6.வருஷம், வருஷம் தோறும் மாறாத் தமதிரக்கம் பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை - மறவாதே
7. வல்ல பரம சுதன் மாட்டுக் கொட்டிலுக்குள் புல்லின் மேற் பிறந்த புதுமை தனை யெந்நாளும்
8.கந்தைத் துணியால் சுற்றி கடவுள் முன் னணைக்குள் நிந்தையாக வைக்கப்பட்ட நிலமை தன்னை
9. அடிமை வேடம் கொண்டனாதிக்கும் நரர்க்கும் நடுவில் நின்ற யேசு ராச நேசந்தன்னை
10. தேவ கோபம் நடுத் தீர்வை சாபம் நித்திய சாவு நரகத்தையும் தவிர்த்த கிறிஸ்து வேந்தை
11. ஆவலாகப் பேயின் அடிமைத் தனத்தினின்று பாவிகளை ரட்சிக்கப் பரம சுதன் வந்ததை
12. காவில் மனுடர் செய்தகன் மவினையை நீக்கிச் சீவனளிக்க வந்த தேவ பாலகனை
13. அன்னை வயிற்றி லுருவாக அமைத்துக் கர்த்தன் பின்னும் பின்னு முனைப் பேணிச் செய்த தயவை
14. ஆன பொரு ளனைத்தும் அமைத்துக் காத்தருளும் வான ராசன் மண்ணில் வந்த சினேகிதத்தை
15. கெட்ட பாவியுனைக் கிறிஸ்து மீட்டுக் கொண்ட மட்டில் லாத் தயவை மரண மரண மட்டும்
16. தன் மையான வேத நாயகன் றமிழ்க்கு நன்மை தருகும் ஏசு நாதர் திரு முகத்தை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal