மரணப்படுக்கையில் படுத்திருந்தேன்
maranappadukkaiyil paduthirundhen
மரணப்படுக்கையில் படுத்திருந்தேன் என்னைத் தொட்டவரே இன்னும் உயிரோடிருக்கிறேன் நான் உயிரோடிருக்கிறேன் ஓடி வந்து உம்மைத் தொட்டதினால் பெரும்பாடு நின்றதே இன்று சுகமாய் இருக்கிறேன் உமது மகளாய் சிரிக்கிறேன்
உரத்த சத்தமாய் சத்தமிட்டேன் என்னைக் கண்டவரே இன்று உலகைக் காண்கிறேன் உமது படைப்பைப் பார்க்கிறேன் கைகால் வராமல் கிடத்தப் பட்டேன் என்னை எழுப்பினீரே இன்று எழுந்து நடக்கிறேன் உம் பாதம் விழுந்து கிடக்கிறேன்
கல்லரைச் சங்கிலியால் கட்டப்பட்டேன் கட்டவிழ்த்தவரே இன்று புத்தி தெளிந்திருக்கிறேன் புது வஸ்திரம் அணிந்திருக்கிறேன் கொன்னைவாய்ச் செவிடாய் தவித்திருந்தேன் தயை செய்தவரே இன்று பேசித்துதிக்கிறேன் வசனம் கேட்கத் துடிக்கிறேன்
அசுத்த ஆவியினால் அவதிப்பட்டேன் என்னை விடுவித்தவரே இன்று ஆராதிக்கிறேன் உமது ஆவியில் நிறைகிறேன் சூம்பின கையோடு சோர்ந்திருந்தேன் என்னை சொஸ்தமாக்கினீர் இன்று கைகளை அசைக்கிறேன் இரு கரங்களைத் தட்டுகிறேன்
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal