மகிழ் மகிழ் மந்தையே
magizh magizh mandhaiyae
மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன் மைந்தன் பரமேறினார், அல்லேலுயா !
மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார் ; நிகழ திருச் சேனை பாடும் அல்லேலுயா ,இன்று - மகிழ்
1. வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா வானங்கள் மேலறினார் அல்லேலுயா! தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார் , ஞானமுடன் பாடுங்கள் , அல்லேலுயா , இன்று -மகிழ்
2. தந்தை வளபாகத்தில் சத்திய கிறிஸ்து எங்கள் சத்துருக்கள் மேற்சிறந்தார், அல்லேலுயா ! சொந்தக் காயங்கள் காட்டிச் சுகிர்தமுடன் ஜெபிப்பார் ; மந்தையே , உந்தனுக்காய் அல்லேலுயா , இன்று- மகிழ்
3. மோட்ச சுதந்தரர் நாம் வானோருக்கும் ஒப்பர் , முடிவில்லாப் பாக்கியர் நாம், அல்லேலுயா ! பாழ்ஜெகம் நிலையல்ல ,பரம சஞ்சாரிகள் நாம் சூட்சுமக் கர்த்தனுக்கே அல்லேலுயா , இன்று -மகிழ்
4. பூதலமந்தமட்டும் உங்களுடனே நித்தம் புனிதன் இருப்பேனென்றார்; அல்லேலுயா ! ஏதேமக்குக் குறைச்சல் ஏசெங்களோடிருந்தால், யாதுமோசந்தொடரும்? அல்லேலுயா , இன்று
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal