மானுவேல் தொண்டரே
maanuvel thondarae
மானுவேல் தொண்டரே! - ஆர்ப்பரித்து மகிழ்ந்து பூரிப்போம்.
மானிலமீது சமாதானமா மென்ற வானவர் வாழ்த் துதவறா தென நம்பும், நானிலமெங்கும் சகோதர ஐக்கியம் நண்ணும் பகலருணோதயம் ஆகுதே; நாடுவோம், - அதைத் தேடுவோம்.- இனி நாமுமுயற்சி கையாடுவோம், பாடுவோம். - மானு
1.தீர்க்க ருரைப்படியே - உலகெங்கும் தீங்கிலாக் காலம் வரும்; தாக்கும் படைக்கலங்கள் - கிருஷிகச் சாதனமாகி விடும்; மாக்க ளெலாமொரே தந்தையின் மக்களாய், மன்னன் யேசுவுக்கு ளொன்றான தோழராய், வாக்குவாதங்கள், வழக்குகள், யுத்தங்கள் நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள் நிலைத்து, - அன்பு - வளர்த்துக், - கரங் கொடுத்து, - உற - வடுத்துமதிப்பர்- மானு
2.போன காலங்களிலே - நடந்திட்ட பொல்லாங்கும் பாடுகளும், ஈனத் துரோகங்களும், - விளைவித்த ஈங்கிசைபோதும் இனி வானபரனின் மலரடிக் கண்ணுற்று, வல்ல பரிசுத்த அன்பினாவி பெற்று, மானுவேலே சையர் நாமமே முன்னிட்டு, மற்றுமவர் செய்கை மாதிரி நாம் கற்று, மாட்சியாய், - அவர் - சாடசியாய்,- இந்த மண்ணிலத்தார் ஒத்து வாழச் செபித்துமே - மானு
3.சர்வ ஜனநேசம் - நிறைவுறத் தாமதமானாலும், கர்வம் பொறாமை பகை - தடைசெய்யக் காலம் நீடித்தாலும், அருள் நம்பிக்கை கொண்டற்பமெனு நம்மால் ஆனதைச் செய்குவோம், முன் தூதர் போலவே இருளகல விடிவெள்ளி தோணுது; எங்கும் நடுப்பகல் மங்களநாள் வரும்; யேசுவே, - இக - மாசுடர் - அவர் நேசமே, - புவித் - தோஷமகற்றிடும். - மானு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal