மாதயவாக எங்களுக் காகப் பாடுபட்டார்
maadhayavaaga engaluk kaagap paadubattaar
மாதயவாக எங்களுக் காகப் பாடுபட்டார் இத்தனையாய்-மேசையா-தேவ சுதன்
1.ஆதியதஞ் செய் பாதகத்தினால் அற்புத நீதர் கிருபை போதர் யேசு நாதர்
2. கடின மாகக் கொடிய யூதர் கட்டியே நடத்த மகா சடுத்தப் பாடு படுத்த
3. ஆகடியத்துடன் பிடித்துக் கட்டிச் சென்றாசாரி முன்பாகக் கொண்டு போகக் கொலையாக
4. அன்னாவுங் காய்பாவும் சங்கமும் யாவர்களுங் கேட்க யூதர் பார்க்க ஞாயந் தீர்க்க
5. காய்மகாரத்துடன் பொல்லாத சேவகன் கன்னத்திலே யடிக்க மிக வலிக்கத் துடி துடிக்க
6. முக்காடிட்டுத் தலையிலடித்து முந்தியடித்தவனார் சொலென மூர்க்கப் பொலாதவர் கேட்க
7. கோட்டி பண்ணி இராமுழுதும் பலகோரணி கொண்டாட்ட விளையாட்ட குற்றம் சாட்ட
8. வஞ்சகக்கார இரண்டு பொய் சாட்சிகள் வந்து சபையேற புலை கூறச் சங்கம் சீற
9. பத்தி சேர் பேதுரப் போஸ்தலன் சத்தியம் பண்ணி மறுதலிக்க மனம் சலிக்க சேவ லொலிக்க
10. தேசிகன் வஸ்திரம் கிழித்து மரணத் தீர்மானம் செய்ய மிக வைய்ய நரருய்ய
11. காய் பாவின் வீட்டிலிருந்து பிலாத்து முன் கட்டின கட்டோடே வருதாடு அதை நாடு
12. வேதநாயகன் பாடும் புலம்பல் மெத்த மன முருக சபை பெருக ஜெயம் வருக.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal