குருசில் குருசில் குருசில்
kurusil kurusil kurusil
குருசில் குருசில் குருசில் நேசரேமரிக்க காரணம் தான் ஏனோ? 2
பாவம் பெருகின பாவிகள் மீது கிருபை அதிகமாய்ப் பெருகினதாலோ ! - 2 பாவிகளை மீட்கவோ - மரித்தீர் - பாவிகளை மீட்கவோ - 2
பரலோக விட்டு பாரினில் வந்த காரணம் ஏனோ கருணையின் தேவா பாடுபட்டு மாளவோ - எமக்காய் பாடுபட்டு மாளவோ - 2
சாபமாகி சாவை அடைந்த காரணம் ஏனோ கல்வாரி நாதா - 2 சாபமதை போக்கவோ - எமக்காய் சாபமதை போக்கவோ - 2
பூமியிலிருந்து உயர்த்தப்பட்டு உன்னதனே நீர் மாண்டது ஏனோ - 2 எம்மையே இழுத்திடவோ - உம்மண்டை எம்மையே - 2
திருக்கரம் கால்களில் ஆணிகள் ஏற்று திருஉதிரம் சிந்தக் காரணம் ஏனோ பரலோகை ஈந்திடவோ - நரர்க்கு பரலோகை ஈந்திடவோ - 2
மகிமையின் தேவா மாசற்ற சீலோ மாண்டோ எமக்காய் கல்வாரி குருசில் - 2 மகிமையைத் தந்திடவோ - நித்திய மகிமையைத் தந்திடவோ - 2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan