குணப்படு பாவி தேவ கோபம்
kunappadu paavi deva kobam
குணப்படு பாவி தேவ கோபம் வரும் மேவி - இப்போ கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம் காலமிருக்கையில் சீலமதாக நீ
1. கர்த்தனை நீ மறந்தாய் அவர் கற்பனையைத் துறந்தாய் பக்தியின்மை தெரிந்தாய் பொல்லாப் பாவ வழி திரிந்தாய் புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடிவா உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்
2. துக்கமடையாயோ? பாவி துயரமாகாயோ? மிக்கப் புலம்பாயோ? மனம் மெலிந்துருகாயோ? இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ? தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?
3. தாவீ தரசனைப்போல் - தன்னைத் தாழ்த்தும் மனாசேயைப் போல் பாவி மனுஷியைப்போல் மனம் பதைத்த பேதுருபோல் தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி
4. உன்னை நீ நம்பாதே இவ்வுலகையும் நம்பாதே பொன்னை நீ நம்பாதே எப்பொருளையும் நம்பாதே தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர் நின்னையும் ரட்சிப்பார் அன்னவரைப்பற்று
5. வேதத்தில் உந்தனைப் பார் அந்த வேத விதிப்படி நேர் நீதியைச் செய்தவனார்? தூய நின்மலன் வாக்கதோ கூர் தீதுறும் பாவியின் தீமையறிந்து கொள் நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm(D#) (G#) A#m(C Fm) Fm Fm C# D# C Fm Fm A#m Fm D# G# C Fm Fm C# D# C Fm Fm A#m Fm D# G# C Fm Fm C# D# C Fm Fm A#m Fm D# G# C Fm Fm C# D# C Fm Fm A#m Fm D# G# C Fm Fm C# D# C Fm
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal