குணம் இங்கித வடிவாய் உயர்
kunam ingidha vadivaay uyar
குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே.
1.மன்றல் செய்து மனை புகு மண வாளனோ டவ னேரும் தன் றுணையான மங்கையும் இங்கே தழைக்க அருள் தாரும். - குணம்
2.ஆதி மானிடற் கான ஓர் துணை அன்றமைத்த நற் போதனே, தீகற் இணையாம் இவர்க் கருள் செய்குவீர், எங்கள் நாதனே. - குணம்
3.தொன்று கானாவில் மன்றல் ஓங்கிடத் தோன்றிய தயாபரனே, இன்று மன்றல் சிறந்திட அருள் ஈந்திடும், க்ருபா கரனே. - குணம்
4.பண்பதில் அவ லேசமும் குறை பாடில்லாத தெய்வீகனே, நண்பதில் இரு பேரும் வாழ்ந்திட நண்ணும், மா திரி யேகனே. - குணம்
5.உற்ற நல் உற வோரும் எங்கள் உரிமை ஆனவர் யாரும் பற்றதாய் உறு பத்தியோடும்மைப் பாட நல் மனம் தாரும். - குணம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal