கோடையில் வாடும்மான்
kodaiyil vaadummaan
கோடையில் வாடும்மான் ஓடைமேல் வேட்கையாய் ஓடியே ஓலமிட் டோயுதல் போல் நாடி என் ஆத்துமம் ஆண்டவர் மீதென்றும் நாட்டமுற் றோலமிட்டுலைகின்ற தே
வேந்தன்மேல் ஆறாத வேட்கையே உடையேன் விள்ளரும் திருமுன் என்றடைவேன் மாந்தர்கள் உன் இறை என்றுனைக் காப்பாரோ என்றேச என் கண்ணீர் உணவானதே
பேரின்ப வாழ்த்தொடும் ஆர்ப்பொடும் பண்டிகைக் கோர் பெரும் கூட்டத்தை நான் நடத்திச் சீரிய கோயிலுள் சேர்த்ததை எண்ணுங்கால் சிந்தைஎல் லாமுள்ளே சேர்ந் துருகும்
ஆண்டவர் உனைமறந் தார் எனக் கலங்கா தான்மாவே காத்திரு, ஆண்டவர் க்காய் மீண்டும் விழாக்கண்டு போற்றுவேன் கலங்கேல் மீட்பரின் மீதென்றும் நம்பகம்பூண்
அருவியின் பேரின்ப ஆர்ப்பரிப் போங்கிட ஆழியை ஆழி அழைக்கின்றதே பெருகிடும் அலைகளும் திரைகளும் என்மேலே போர்த்தும், புரண்டெழுந்தோடுவன
பகலிலே மாறாத பேரன்பைப் பெய்கின்றீர் இரவெல்லாம் வான்புகழ் வாய்பாடும் நிகரில்லா மாமலை ஆகிய நேயனே நின்திரு வேளைக்காய் காத்திருப்பேன்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal