கிறிஸ்தவ இல்லறமே
kiristhava illaramae
கிறிஸ்தவ இல்லறமே - சிறந்திடக் கிருபை செய்வீர், பரனே!
பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப் பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல - கிறிஸ்தவ
1.ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும், திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும், சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும், சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் - கிறிஸ்தவ
2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல், உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல, நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி, நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் - கிறிஸ்தவ
3.அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம், அருமையாக நிறைந்த அயலார்க் கொளிவிளக்காய்த், துன்பஞ் செய்கிற பலதொத்து வியாதிகளைத், தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து - கிறிஸ்தவ
4. மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே, மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று, கலைஉடை உணவிலும், கல்வி முயற்சியிலும், கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக் - கிறிஸ்தவ
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal