கிஞ்சிதமும் நெஞ்சே
kinjidhamum nenjae
கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே - நல்ல கேடகத்தைப் பிடி நீ - விசுவாசக் கேடகத்தைப் பிடி நீ
வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில், நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல நிச்சயமான பரிசை அறிந்து நீ – கிஞ்சிதமும்
1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க, பத்தியில் தெளிக்கவும், - நித்ய ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க, திறமை அளிக்கவும், சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும், தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க, செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம் - கிஞ்சிதமும்
2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ, கண்டடைந்தார் பேறு? - நல்ல தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத் தொகுத்து வெவ்வேறு விண்டுரைக்கில் பெருகும் தீ அணைத்ததும், வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும், கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல காரியங்களையும் பார் இது மா ஜெயம் – கிஞ்சிதமும்
3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட உன் செயல் மா பேதம் - அதின் தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல், துணை அவர் பாதம் ஏற்றர வணைக்கவே பணிவாக இரந்து மன்றாடி அவர் மூலமாகவே, ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த ஆவி உதவியை மேவி, அடைந்து நீ - கிஞ்சிதமும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal