கவலை வைக்காதே
kavalai vaikkaadhae
கவலை வைக்காதே, மகனே, நீ கவலை வைக்காதே.
கவலைவைத்திந்த உலகை - நாடி அபலமான வரனந்தங் - கோடி - கவலை
1.பெற்ற பிதா நமக்கொன்று, அவர்க் குற்ற செல்வம் நமக்குண்டு, உத்தம வேலை கைக்கொண்டு - செய்ய உனக்கென்ன குறையுண்டு? - கவலை
2.என்ன நான் புசிப்பேனின்று - நாளை என்ன நான் குடிப்பேனென்று இன்னும் வீண்கவலை கொண்டு - தினம் ஏங்கிறாய் எப்பலனுண்டு? - கவலை
3.காகங்களை நோக்கிப்பாரு - நல்ல களஞ்சியமுண்டோ? வேறு தாகம் பசிக்கவைக்காரு - இரை தருகிறாரென்று கூறு. - கவலை
4.புல்லும் பூண்டும் காட்டில் வளரும் - பிழைப் பூட்டுவ ராரென்று கழறும், பொல்லாக் கவலையாற்றழலும் - மனம் பொறுமையில்லாமல் அலறும். - கவலை
5.உடையின் கவலையாலே - மனம் உடையுமே பல வேளை, முடியுமோ உந்தனாலே - அல்ல முற்றுமது பிதாவேலை. - கவலை
6.கானகலீலிப் பூப்போலே - கன ஞானி சாலமோன் தன் மேலே பூணவில்லையாகையாலே - பிதா புல்லுக்குடுத்து மாப்போலே. - கவலை
7.கவலைப்பட்டோர் முழம் கூட்டும் - நரன் காசினியிலுண்டோ? காட்டும் குவலயமெல்லாம் போற்றும் - இயேசு கோமான் திருமொழிகேட்டும். - கவலை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal