கருணாகர தேவா
karunaagara devaa
கருணாகர தேவா, இரங்கி இந்தக் கங்குலில் எனைக் கா வா.
இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல என்றும் ஒளியதாக இலங்கும் மா திரியேக. - கரு
1.சென்ற பகலில் காத்துச் சேர் விபத்துகள் நீத்துச் சேர்த்தையே வழி பார்த்துத், திகில் தீர்த்து; நன்றி யதற்குத் துதி நவில்வன், நீ என் கதி நாடும் என் அதிபதி; நமஸ்காரம் உனக்கதி. - கரு
2.நித்திரையில் உட்புகுந்து, சத்துருப் பசாசு வந்து நெருங்காமல் நீ எழுந்து, நிலை புரிந்து, சுத்தநெஞ்சோ டமைந்து தூங்க நல் துயில் தந்து, தூதர் காவல் நிறைந்து, துணையாய் என்னோடிருந்து. - கரு
3.தாதா, அண்டினேன் உன்னைத் தஞ்சம் நீயே, என்னைத் தாங்குவதார் பின்னை, சார்வன் நின்னை; வேதா, நான் உன் தொண்டு வினைஞன் என் நிலை கண்டு, மீண்டுன் செட்டைகள் விண்டு விலகா தணைத்துக்கொண்டு. - கரு
4.தீய எண்ணங்கள் பாற, திகில் கனவுகள் மாறத், திவ்ய சிந்தை உள் ஊற, ஸ்திரம் ஏறக், காயம் உயிரும் கூடக், கருத்துன்னோ டுறவாடக், காலை நல்லறம் நாடக், கரிசித்துன் துதி பாட. - கரு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal