கர்த்தரும் ரட்சகரும் என் மீட்பரும் சகாயரும்
kartharum ratsagarum en meetparum sagaayarum
கர்த்தரும் ரட்சகரும் என் மீட்பரும் சகாயரும் என் நங்கூரமும் என் நம்பிக்கையும் என் தயாபரரும் என் மறைவிடமும் என்னோடு இருக்கையிலே எனக்கொன்றும் குறைவேயில்ல இயேசு என்னோடு இருக்கையிலே எனக்கு கொஞசமும் பயமேயில்ல
இல்லை இல்லை என்று சொல்லி முறுமுறுப்பேனோ தொல்லை தொல்லை என்று சொல்லி சலித்துக்கொள்வேனோ-2 சாத்தானின் சதிக்கெல்லாம் ஒத்துக்கொள்ளுவேனோ சர்வவல்ல தேவனை மறுதலிப்பேனோ-2 எனக்கேதாவது ஒரு தேவை என்றால் இயேசுராஜா இருக்க ஒரு கவலை இல்ல-2 எனக்கெல்லாமும் ஆனவரு என்ன நல்லா நடத்துவாரு-2
எப்பொழுதும் யாரைப் பத்தி குறை சொல்லுவேனோ தப்புதண்டா செஞ்சுப்புட்டு கைய காட்டுவேனோ-2 நெஞ்சத்தட்டி நான்மட்டுந்தான் நீதிமான்னுவேனோ வஞ்சகத்த நெஞ்சுக்குள்ள மறைச்சி வப்பேனோ-2 எந்த கேடான சிந்தைக்கிங்கு இடமுமில்ல என்ன போராட்டம் வந்தாலும் சளைக்கவில்ல-2 இன்னும் சந்தோஷமாய் இருப்பேன் புது சங்கீதமா படிப்பேன்-2
சோம்பேறி நெனப்புல தூங்கி விழுவேனோ வீம்பாக வெட்டி கதை பேசித்திரிவேனோ-2 பேராசை பேய்க்கெல்லாம் இடம் கொடுப்பேனோ ஊராரு மெச்சிக்கத்தான் வலம் வருவேனோ-2 இந்த மண்ணான உடம்புல உசுர் இருக்கு என்ன பண்ணாலும் அதுக்கொரு கணக்கிருக்கு-2 இத எண்ணாம போறதுக்கு இன்னும் என்னதான் இங்க இருக்கு என்ன கண்ணாக பார்ப்பதற்கு இயேசு கண்ணு என் மேலிருக்கு
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal