கர்த்தருக்குக் காணிக்கையிதோ
kartharukkuk kaanikkaiyidho
கர்த்தருக்குக் காணிக்கையிதோ தம்மையே தந்த கர்த்தருக்குக் காணிக்கையிதோ
கர்த்தருக்குக் காணிக்கையாய்ப் பத்திலொன்று நான் கொடுப்பேன் சத்தியக் கிறிஸ்து நாதர் சபையை வர்த்திக்க வேணும் - கர்த்த
1 அநியாயம் நீங்க வேணும் உலகிலே மெய் அறிவு வளர வேணும் தனியேசு மெய்த்தேவனை நந்தேசத்தில் சகலரும் போற்ற வேணும்
கனிவாய்ப் போதகர் வேதம் கற்றறிந்து சொல்ல வேணும் கணக்காய் இதன் செலவு கட்டி வரவேணும் அய்யா - கர்த்
2 ஆபிரகாம் பத்திலொன்றையே மெல்கிசே தேக்கு அனைத்திலும் தந்ததையே மா பிரியமாக வாசித்தேன் இஸ்ரயேல் பெத்தேல் வள்ளற்குச் செய்பொருத்தனையே
ஆண்டவர் பரன் அவர்கட் கனைத்தும் ஆசிர்வதித்துத் தாபரம்த மதடி கீழ்த் தந்தளித்த தெல்லாங் கேட்டேன் - கர்த்
3 கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்தேன் இதோ இத்தனை கூடினதைக் கொண்டிதோ வந்தேன் நஞ்சைவிளைவினி லோர்பாகம் சேர்த்து வைத்தேனான் நாலாவகை வரத்திற் கொஞ்சம்
புஞ்சை பல போகத்திலும் போட்டு வைத்தே னான்குறுணி புத்தகக் கணக்கில் கண்ட தித்தினை தொகையுமாச்சு - கர்த்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal