கண்டேன் என் கண்குளிர
kanden en kangulira
கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் - கண்
1. பெத்தலேம் - சத்திர முன்னணையில் உற்றோருக் - குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் - கண்
2. தேவாதி - தேவனை, தேவசேனை ஓயாது - தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண்
3. பாவேந்தர் - தேடிவரும் பக்தர் பரனை, ஆரேந்தர் - அடிதொழும் அன்பனை, என் இன்பனைநான் - கண்
4. முத்தொழிற் - கர்த்தாவாம் முன்னவனை, இத்தரை - மீட்க எனை நத்தி வந்த மன்னவனைக் - கண்
5. மண்ணோர் - இருள்போக்கும் மாமணியை, விண்ணோரும் - வேண்டி நிற்கும் விண்மணியைக், கண்மணியைக் - கண்
6. அண்டி னோர்க் - கன்புருவாம் ஆரணனை, கண்டோர்கள் - கலிதீர்க்கும் காரணனை, பூரணனைக் - கண்
7. அன்னையாம் - கன்னியும் ஐயனுடன் முன்னறி - யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் - கண்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal