கல்லு மல்லவே காயம்
kallu mallavae kaayam
கல்லு மல்லவே காயம் வல்லுமல்லவே மனமே.
வெள்ளி பொன் விலை மதியா மேரு மல்லவே அப்பா. - கல்லு
1. வல்லமை பேசாதே நாளை வருவதறியாய் ஆதால் நல்லவழி தேடித் தேவ நாமத்தைத் தியானி. - கல்லு
2. சூரியன் கீழ் கண்டதெல்லாம் மாயை யல்லவோ சால்மோன் பாரறியச் சொன்னதை நீ பார்த் தறியாயோ. - கல்லு
3. காற்றடித்த மேகம் புகைக் கொப்பதாகவே இங்கே போற்றிய மனுடர் ஜீவன் போயொழியுமே. - கல்லு
4. வேகமாய் வடியு மாற்றுக் கொப்பதாகவே மாயத் தேக நரர் நாட்களுஞ்சீக் கிரங்க ழியுமே. - கல்லு
5. இராப் பகலிருள் வெளிச்சம் மாறும் வண்ணமே ஐயோ நராட்களின் மகிழ்ச்சிக்குமா மாறுதலுண்டே. - கல்லு
6. பூ மலர் போலே விளங்கி பூ வதங்குமே அது போலவே நரருருவம் மாறி வதங்கும். - கல்லு
7. கொஞ்சநாள் செயஞ் சிறப்பான் பஞ்சை மனுடன் அவன் கொஞ்ச நோய் வந்தால் கிடப்பான் தொஞ்சு போவானே. - கல்லு
8. மேலது கீழ் கீழதுமே லாமுருளை போல் நரர் மேன்மையும் வாழ்வுங்கீழது மேலு மாகுமே. - கல்லு
9. பூவுலகின் மேன்மையென்ன மாதரித்திரன் போல யாவரும் வணங்கும் ராயன் சாவு மொக்குமே. - கல்லு
10. எத்தனை கற்றாலுமென்ன சுத்தப் பேதைக்குச்சரி யொத்தபடி செத்துப் போவான் முற்று மண்ணாவான். - கல்லு
11. நுன்னிமை ஞானியென்றாலும் கீர்த்தி பெற்றாலும் ஐயோ அன்னவன் மலையும் நேரம் யாவுங்கலையும். - கல்லு
12. வெள்ளச் சேதத்துக்கும் பல விக்கினத்துக்கும் பார் கொள்ளைக்கும் சடுதியிற் போம் கூட்டு மாஸ்தியே. - கல்லு
13. ஆசனந் துரைத்தனங்கள் தத்து வங்களும் அர சாண்ட மன்னரும் ஒரு நாள் மாண் டொழிவார்கள். - கல்லு
14. கொஞ்சநாள் மினுக்கும் நரரின் சிறப்புகள் செருக்கை வெஞ்சிறு பூச்சிகளரிக்கும் வீவழிக்குமே. - கல்லு
15. இயாவும் ஓட்டமாகப் பாயும் யாவுமழியும் மெய்த் தேவ பத்தியே கெலிக்கும் ஜீவனிலைக்கும். - கல்லு
16. நெல்லை வேதநாயகன் பா வென்றும் நிற்கும் போல் இனி நல்ல வரடையும் கதி நாமடைவோமே. - கல்லு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal