கதிரவன் எழுகின்ற
kadhiravan ezhugindra
1.கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத் துதி செய்ய மனமே - எழுந்திராய்.
2.வறண்டு தண்ணீரற்ற வனம் இந்தப் புவிதனில் திரண்ட தயை தேவை - நாடுவேன்.
3.கடவுளின் வல்லமை, கன மகிமை காணும் இடமதில் செல்வதே - என் இஷ்டம்.
4.ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை ஆவலாய் நாடி நான் - போற்றுவேன்.
5.ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை நேயமாய்ப் பாடி நான் - உயர்த்துவேன்.
6.மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில் கர்த்தரின் செயல்களைச் - சிந்திப்பேன்.
7.அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த் தொல்லைக்கு நீங்கியே - ஒதுங்குவேன்.
8.ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர் நேத்திரம் போல் என்னைக் - காக்கிறார்.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal