காட்சிப் பொருளாக நிற்பவரும்
kaatsip porulaaga nirpavarum
காட்சிப் பொருளாக நிற்பவரும் இல்லை எந்த கடைத்தெருவிலே விற்பவரும் இல்லை அவர் கல்லோ மண்ணோ மரமோ அல்ல ஜீவனுள்ள தேவன் வெறும் பொன்னோ பொருளோ இயற்கை அல்ல அகிலம் படைத்த ராஜன்
மண்ணில் உதித்ததெல்லாம் மகத்துவம் ஆகுமா கண்ணில் பட்டதெல்லாம் கடவுள் ஆகுமா எண்ணம் எழுத்தில் வரும் தத்துவங்கள் எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் அது கூட்டுக்கு உதவுமா சர்வ ஞானியும் அவரே சகலமும் உண்டாக்கினவரே
காற்றும் கடலும் அவர் கைகளில் அடக்கம் காலமும் சமயமும் அவருக்குள் கிடக்கும் பார்க்கும் இடமெல்லாம் அவரின் படைப்புகள் உலக ஞானம் வெறும் கண்ணீர் துடைப்புகள் சர்வ வியாபியும் அவரே எங்கும் நிறைந்தவரும் அவரே
அதிசயம் என்பது அவரின் நாமம் ஆசீர்வதிப்பதே அவருக்குப் பிரியம் அற்புதம் செய்வது அவரது பழக்கம் அன்பு காட்டுவதே அவருக்குப் பிடிக்கும் சர்வ வல்லமை கொண்ட தேவன் சதா காலத்திற்கும் ராஜன்
எத்தனை வழி முறை இருந்தும் என்ன எதுவுமே நித்தியப் பாதை அல்ல சத்திய தேவனை அறிந்து கொள்ள சங்கடம் வேண்டாமே நெருங்கிச் செல்ல கதவைத் தட்டுகிறார் இயேசு அவரிடம் மனம் விட்டுப் பேசு
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal