காரணமோ மானிடர்
kaaranamo maanidar
காரணமோ மானிடர் கண்காட்சியோ சொல்லுகின்ற ஆரணமோ என்ன அதிசயமோ-பூரணமே ஆனதெல்லாஞ் செய்த அனாதியாயிருப்பதற்கு வானமோ மாட்டுக் குடில்.
வானம் பூமியோ பராபரன் மானிடனானாரோ என்ன இது. ஞான வான்களே நிதானவான்களே.
1.பொன்னகர சாளும் உன்னதமே நீளும் பொறுமை கிருபாசனத்துரை பூபதி வந்ததேததிசயம்.
2. சத்திய சருவேசன் நித்தியக்கிருபை வாசன் நித்திய பிதாவினோர் மகத்துவக் குமாரனோ இவர்.
3. அரூபரூப சொரூபன் கேரூபின் வாகன தீபன் வீரியப் பிரதாபன் சீனாவெற்பிலிருந்தவன் கற்பனைத்தந்தவன்.
4. மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி.
5. வேறே பேரல்ல சுரர் விண்ணவ ராருமல்ல மாறில்லாத ஈறில்லாத வல்லமைத் தேவனே புல்லிற் கிடக்கிறார்.
6. சீயோனின் மாதேயினிச் செணந் தரியாதே மாயமென்ன வுனக்குச் சொல்லவோ வந்தவர் மணவாளனல்லவோ.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal