காணிக்கை தருவாயே
kaanikkai tharuvaayae
காணிக்கை தருவாயே - கர்த்தருக்குனது காணிக்கை தருவாயே.
காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு வேணும் ரட்சிப்பினை நீ காணம்படி செய்ததால். - காணி
1.பத்தில் ஒரு பங்குதானோ? - பத்தினில் கட்டுப் பட்ட யூதருக் கல்லவோ? அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால், பத்தில் ஒரு பங்கல்ல, பல மடங்காகிடாதோ? - காணி
2.உன்றன் உடல் உன் சொந்தமோ? - அதைவிடினும் உன் மனம் ஆவி பந்தமோ? அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால் உன்னையும் உன்னுடைய உடைமையுமல்லோ ஈவாய்? - காணி
3.தேவ வசனம் பரப்ப, - அதனுக்கென்று செல்லும் செலவை நிரப்ப, ஆவலாய் யேசுவுக்கே ஆராதனை நடத்தும் தேவ ஊழியத்துக்கும் திறந்த மனதுடனே. - காணி
4.பயிர் பலன் மூலமாகவும், - இன்னும் பலர்க்குப் பணம் முதலானதாகவும், உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே உயிரைப் படைப்பாயோ, உடைமையைக் கொடாவிடில்? - காணி
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal